இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ஏழு பேரையும் தமிழக அரசே விடுதலை செய்ய முடியும் என  உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏழு தமிழர்கள் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றே இன்று  தீர்ப்பை வழங்கியுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் எழு பேரையும் விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என நீதிபதி ரஞ்சன் கோகேய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதன் மூலம் இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.