தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கும் செல்லும் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றுவதற்கு அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள்  ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொதுஎதிரணியினர் முன்னெடுத்த மக்கள் எழுச்சிப் பேரணியில் நேற்றைய தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்த அவர்,

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டு மக்­களை கஷ்­டத்­துக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் நாட்டு மக்­களை அதி­ருப்தி அடைய செய்­துள்­ளன. நாட்டை பிளவுபடுத்தும் சட்­டங்­களை திருட்டுத்தன­மா­க­கொண்டு வரு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. மேலும் பணக்­கா­ரர்கள் முதல் சாதா­ரண மக்கள் வரை வரிக்கு மேல் வரி விதித்து வாழ முடி­யாத சூழலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக போராட வேண்­டி­யது எமது பொறுப்­பாகும்.  அர­சாங்கம் சர்­வா­தி­கார பய­ணத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்­ளது. ஆகவே இந்த பய­ணத்தை நாம் உடன் நிறுத்தி ஆக வேண்டும். 

பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதி­ர­ணிக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்­கப்­பட்ட வண்ணம் உள்­ளது. ஆகவே ஆட்­சியை கவிழ்க்கும் போராட்­டத்தின் ஆரம்பம் இது­வாகும். மக்­களை கஷ்­டத்­துக்கு உள்­ளாக்கி வாழ முடி­யாத சூழலை ஏற்­ப­டுத்­திய இந்த ஆட்­சியை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு  நாட்டு மக்கள் அனை­வரும் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை நல்க வேண்டும்.

இந்த போராட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடத்த உத­விய அனை­வ­ருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.