இந்தோனேஷியாவில் அசே மாகாணத்தில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 குறித்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அமுலிலுள்ளன.

இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஹோட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.