சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குடியிருப்பில் பணியாற்றிய காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை பொலிஸ் ஆணையாளர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் வழற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு பிணை பெற முடியாது. சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.