கிரிபாவையில் யாலபஹா பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 27 வயதுடைய மகனை மண்வெட்டியில் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று இரவு(05-09-2018) இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 27 வயதுடைய மகன் குடிபோதையில் அவரது தந்தையுடன் தகராறில் ஈடுபட்ட நிலையில் , கோபமுற்ற தந்தை இவ்வாறு மண்வெட்டியில் தாக்கி மகனை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புயை சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்காக கிரிபாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.