ஐக்கிய தேசியக் கட்சியின் 72 ஆவது ஆண்டு நிறைவுக்கான நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.