கொழும்பில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

Published By: Priyatharshan

06 Sep, 2018 | 09:08 AM
image

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் “ஜனபலய” போராட்டத்தையடுத்து பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் இன்று போக்குவரத்துக்கள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தல‍ைமையில் நேற்றைய தினம் கொழும்பில் பொது எதிரணியினர் முன்னெடுத்த மக்கள் எழுச்சி பேரணியும் சத்தியாக்கிரகப் போராட்டமும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நடவடிக்கை, மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுதல், ஆட்சி மாற்றம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு வழங்குதல், வெளிநாடுகளுடனான முறையற்ற பொருளாதார ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி, மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

நாடு முழுவதிலுமிருந்து கொழும்புக்கு பஸ்களிலும் பிற வாகனங்களிலும் வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நகிரில் விகாரமஹாதேவி பூங்கா, கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி சந்தி, கொழும்பு சுகததாச  விளையாட்டு மைதானப் பகுதி, கொம்பனித் தெரு சந்தி, மருதானை ஆகிய பகுதிகளிலும் ஒன்று கூடியதுடன் லேக்கவுஸ் சுற்றுவட்டத்தை நோக்கி பேரணியாக சென்றனர். 

லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் தொடர்ந்தும் போராடத்தை முன்னெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் பின்னர் லோட்டஸ் சுற்றுவட்டத்தை நோக்கி படையெடுத்து  அங்கு மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி சத்தயக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். 

அதனைத் தொடர்ந்து சத்தியக் கிரகப் போராட்டம் இரவு 11 மணியளவல் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் கொழும்பில் நேற்று  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து இன்று வழமைக்கு திரும்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31