(எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தகாலத்தின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இருந்தபோதிலும் குற்றமற்றவர்களை நாங்கள் எப்படியாவது விடுதலை செய்தே தீருவோம். அவர்களை அரசாங்கம் பலவந்தமாக தடுத்து வைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தண தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள். ஆகவே இது தொடர்பில் போராட்டங்களில் ஈடுப்பட வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகள் விடுதலை முன்வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில வினவிய போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.