(நா.தனுஜா)

எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல்சார் இருதரப்பு உறவினை பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என தயான் ஜயதிலக தெரிவித்தார்.

ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தயான் ஜயதிலக, தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் கூறியுள்ளதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.