முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மதி வெடியகற்றும் போது காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பணியாளர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மிதிவெடி அகற்றும்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வெடி பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, ஓமந்தையைச் சேர்ந்த 25 வயதுடைய  நிதர்சன் என்பவராவார்.