புதிய தரத்திலான தபால் உறைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் தபால் பரிமாற்றங்களின் போது பல்வேறு வகையான தபால் உறைகள் பயன்படுத்தப்படுவதனால் ஏற்படுகின்ற சிக்கலை கருத்திற் கொண்டு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் தரத்திற்கேற்ப புதிய தரத்திலான தபால் உறைகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பில் தபால் உறைகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.