(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

29 பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பாராளுமன்ற நடவடிக்கையானது இன்று மந்தகதியிலேயே நடைபெற்றதுடன் கூட்டு எதிரணியினர் எவரும் சபையில் இருக்கவில்லை.

இந்த அமர்வின் போது தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கூட்டு எதிரணி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மாத்திரமே சபையில் காணப்பட்டார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்  மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் சபையில் அமர்ந்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் அதிகளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவில்லை. மக்கள் விடுதலை முன்னணியினர் அனைவரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடதக்கது.