யாழ்.புன்னாலைக்கட்டுவான் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்  ஐவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஒருகிலோ 250 கிராம் கஞ்சா போதைப்பொருளை  கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.