காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இடைக்கால அறிக்கையினை இன்று பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். 

இந்த அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நிவாரணங்களை வழங்குதல், அவர்களின் உறவுகள் பற்றிய விசாரணைகள் இடம்பெறும் காலப்பகுதியில் அவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு வழங்குதல் போன்றவற்றை பரிந்துரைத்துள்தாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் நாளை  ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்தார்.