பொது எதிரணியினர் இன்று முன்னெடுத்துள்ள  பேரணியில் கலந்துகொள்ளும் மக்களிற்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அரச தரப்பினர் முயன்றுவருவதா பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தடைகளையும் மீறி பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டு கொழும்பை நோக்கி செல்கின்றனர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு முதல் ஆதரவாளர்கள் எங்கள் பேரணிக்காக தயாராகி வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் குரல்கள் இன்று கொழும்பில் ஒலிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இரக்கமற்ற கொள்கைகளால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதை உணரமுடிகின்றது எங்கள் பேரணிக்கு பாரிய ஆதரவு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.