சூலகப் புற்­று­நோயின் ஆரம்ப அறி­கு­றிகள்

Published By: Robert

08 Mar, 2016 | 04:51 PM
image

பெண்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய புற்­று­நோய்கள் பல உள்­ளன. அதில் மார்­பகப் புற்­றுநோய், கர்ப்­பப்பை வாசல் புற்­றுநோய், சூலகப் புற்­றுநோய் என பல உள்­ளன.

இதில் சூலகப் புற்­றுநோய் என்­பது கிட்­ட­த்தட்ட நடுத்­தர வயது 40 வயதில் சூல­கங்­களில் ஏற்­ப­டக்­கூ­டி­யது. மற்­றைய உறுப்­பு­களில் ஏற்­ப­டக்­கூ­டிய புற்­று­நோய்கள் போல் இல்­லாது சூலகப் புற்­றுநோய் எவ்­வித நோய் அறி­கு­றி­க­ளையும் காட்­டாது அமை­தி­யாக உரு­வெ­டுத்து வள­ரக்­கூ­டி­யது. ஆகையால் சூலகப் புற்­று­நோயை கண்­ட­றியும் போது சற்று தாம­த­மா­கிய பர­விய நிலை­யாக இருக்­கலாம். இதனால் இதற்கு சிகிச்­சைகள் வழங்­கும்­போது அதா­வது சத்­திர சிகிச்­சை­யாக இருந்­தாலும் சரி ஊசிகள் மூல­மான சிகிச்­சை­க­ளாக இருந்­தாலும் சரி எதிர்­பார்த்த வெற்­றியை கொடுக்­காமல் விடலாம். எனவே சூல­கப்­புற்று நோய்கள் மிக ஆரம்ப நிலை­யில் கண்­ட­றி­வது சிறந்த வெற்­றி­க­ர­மாக சிகிச்­சையை வழங்க உதவும். இதன் மூலம் நோய் ஏற்­பட்ட பெண்­களும் நோயி­லி­ருந்து முற்­றாக விடு­ப­டக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

சூலகப் புற்று நோய்­களை ஆரம்­பத்தில் கண்­ட­றிய என்ன வழி?

சூல­கங்­களில் புற்­று­நோய்கள் வர முடியும் என்ற விழிப்­பு­ணர்வு முதலில் இருக்க வேண்டும். அடுத்­த­தாக இவ்­வா­றான புற்­று­நோய்கள் அவர்­க­ளது பரம்­ப­ரையில் அதிலும் தாய் வழி உற­வுகள், சகோ­த­ரி­களில் இருந்­துள்­ளதா என்ற விபரம் தேவைப்­படும். இவ்­வா­றான பரம்­பரை தன்மை கொண்­ட­வர்கள் சற்று முற்­கூட்­டியே பரி­சோ­த­னை­களை ஒழுங்­காக செய்ய வேண்டும். பரி­சோ­த­னைகள் என்று வரும்­போது சாதா­ரண ஸ்கான் மற்றும் TV ஸ்கான் என்­ப­னவும் இரத்தப் பரி­சோ­த­னை­யான CA 125 என்ற பரி­சோ­த­னையும் கட்­டா­ய­மாக செய்ய வேண்டும். இதில் ஆரம்ப நிலை­களை ஓர­ளவு சந்­தே­கப்­பட உதவும். அத்­துடன் தேவை ஏற்­படின் 3 மாதங்­களின் பின் மறு­ப­டியும் பரி­சோ­த­னைகள் செய்ய வேண்டும். மிகவும் நுணுக்­க­மான தெளி­வான விப­ரங்கள் அறிய வேண்­டு­மாயின் CT Scan செய்து அறிய முடியும்.

சூலகப் புற்­று­நோயின் ஆரம்ப நோய் அறி­கு­றிகள் எவை?

சூலகப் புற்று நோய் ஆரம்­பிக்­கும்­போது நோய் அறி­கு­றிகள் எதுவும் காட்­டு­வ­தில்லை. இதனால் தான் ஆரம்ப நிலைகள் கண்­ட­றி­யாமல் விடப்­ப­டு­கின்­றது. அத்­துடன் ஆரம்ப நிலை அறி­கு­றி­க­ளாக சில­வேளை வாந்தி, சாப்­பாட்டில் மனம் இல்­லாத தன்மை, சமிபாடு அற்ற தன்மை என்­பன தோன்­றும்­போது பலரும் சாதா­ரண குடல் அல்சர் அதா­வது குடல் புண் என நினைத்து முக்­கி­யத்­து­வப்­ப­டாமல் விடு­வது வழக்கம். அத்­துடன் சூலகப் புற்­றுநோய் வரும்­போது மாத­விடாய் போக்கில் பெரி­த­ளவில் மாற்றம் ஏற்­ப­டு­வ­தில்லை. இவ்­வா­றான கார­ணங்­க­ளினால் சூலகப் புற்­றுநோய் ஆரம்ப நிலைகள் விடு­பட்டு போகின்­றது.

சூலகப் புற்­று­நோய்கள் நன்கு வளர்ந்த பின் ஏற்­படும் நோய் அறி­கு­றிகள் எவை?

சூலகப் புற்­று­நோய்கள் நன்கு வளர்ந்த பின்னர் அடி­வ­யிற்றில் வீக்கம் போல வருவது வயிறு பருத்துக் காணப்­படும். அத்­துடன் ஸ்கான் பரி­சோ­தனை செய்­யும்­போது இவ்­வா­றான வீக்­கத்தை சூல­கக்­கட்டி என உறு­திப்­ப­டுத்த முடியும். அத்­துடன் CA 125 இரத்­தத்தில் சோதித்து பார்க்­கும்­போது மிகவும் அதி­க­மாக இருக்கும். இந்­நி­லையில் இந்­நோயை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

சூலகக் கட்­டிகள் அல்­லது ஓவ­ரியன் சிஸ்ற் எல்­லாமே சூல­கப்­புற்று நோயா­குமா?

ஓவ­ரியன் சிஸ்றில் பல வகைகள் உள்­ளன. நீர்க்­கட்­டிகள், இரத்தக் கட்­டிகள், சொக்­கிலேட் சிஸ்ற் போன்ற பல புற்­றுநோய் இல்­லாத கட்­டிகள் உள்­ளன. இவை புற்­று­நோய்­க­ளாக மாறப்­போ­வ­தில்லை. ஒரு சில வகைக் கட்­டிகள் மட்­டுமே புற்­றுநோய் தன்­மையை கொண்­டி­ருக்கும். எனவே சூலகக் கட்­டிகள் அல்­லது ஓவ­ரிய்ன் சிஸ்ற் என்­ற­வுடன் புற்­றுநோய் என்று நினைக்க வேண்டாம். சில புற்­றுநோய் கட்­டிகள் மிகக் கூடு­த­லா­னவை புற்­றுநோய் இல்­லாத ஆபத்­தற்ற கட்­டிகள்.

சூலகப் புற்­று­நோய்­க­ளுக்கு சிகிச்­சைகள் எவ்­வாறு வழங்­கப்­படும்?

சூலகப் புற்­றுநோய் என சந்­தே­கப்­ப­டும்­போது சத்­திரசிகிச்­சையை மேற்­கொள்ள வேண்டும். அதா­வது வயிற்றில் செய்­யப்­படும் சத்­திர சிகிச்­சை­யின்­போது உள் நில­வ­ரங்கள் விரி­வாக ஆரா­யப்­படும் இதன்­போது கட்டி எந்த அளவு பருமன் உடை­யது. மற்­றைய உறுப்­பு­க­ளுக்கு பரவி உள்­ளதா? மற்றும் மற்­றைய சூல­க­லமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதா என அறி­யப்­படும். இதற்­கேற்ப சூல­கமும் கர்ப்­பப்­பையும் மற்­றைய பாதிக்­கப்­பட்ட இழை­யங்­களும் சேர்த்து அகற்­றப்­படும். சில வேளை­களில் நோய் ஆரம்ப நிலையில் இருப்பின் பெண்ணின் வயதும் குறை­வாக இருப்பின் பாதிக்­கப்­பட்ட சூலகம் மட்டும் அகற்­றப்­பட்டு கர்ப்­பப்பை தங்க விடப்­படும். இவ்­வாறு அகற்­றப்­பட்ட இழை­யங்கள் யாவும் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­படும்.

பரி­சோ­தனைப் பெறு­பே­று­களை பார்த்து மேல­திக சிகிச்சை திட்­ட­மி­டப்­படும். அதா­வது புற்­றுநோய் எதிர்ப்பு ஊசிகள் தொடர்ந்து ஆறு மாத காலம் வழங்­கப்­படும். இதன்­போது புற்­று­நோய்­க­ளுக்­கான சரி­யான சிகிச்சை கிடைக்கப் பெறு­கின்­றது.

சிகிச்சை எந்த அள­வுக்கு வெற்றி தரு­கின்­றது?

சத்­திர சிகிச்சை செய்­தாலும் ஊசி மருந்­துகள் வழங்­கி­னாலும் புற்றுநோய் எந்த அளவுக்கு மற்றைய இடங்களுக்கு பரவி உள்ளது என்பதனை பொறுத்து சிகிச்சை வெற்றிதரும். நோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போது சிறந்த வெற்றியையும் சற்று பிந்திய நிலையில் இருந்தால் சற்று குறைவான வெற்றியையும் சிகிச்சைகள் தருகின்றது. எனவே சூலகப் புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறிவதே சிறந்த சிகிச்சையை வழங்கி சிறந்த பயனை தரவழிவகுக்கும்.ஆகையால் சூலகக் கட்டிகள் சூலகப் புற்றுநோய்கள் தொடர்பான சரியான புரிந்துணர்வு அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32