ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள மஹிந்த அணியின் ஆதரவாகளர்கள் கொழும்பை நோக்கி வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக பேரணியில் கலந்துகொள்வதற்காக கேகாலையில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த பஸ்களை பொலிஸார் இடைமறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொலிஸாருக்கும் பஸ்ஸில் வருகை தந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூட்டு எதிரணியின் இந்த ஆர்ப்பாட்டத்தால் நாட்டில் பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.