கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்கு தயாராக இருந்த பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹாலிஎல - போகமடித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை 05.45 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள்பயணித்த பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலக்கத்தகடு அற்ற கெப் ரக வாகனம் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவே இத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.