2018 ஆம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் தொடரிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டின் வீரர் ரோஜர் பெடரர் வெளியேறியுள்ளார். 

ஐந்து முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரை வெற்றிக் கொண்ட பெடரர், நான்காவது சுற்றில் 29 வயது அவுஸ்திரேலிய வீரர் ஜோன் மில்மேனை எதிர்கொண்டு ஆடினார்.

எளிதாக வெற்றி பெற்று காலிறுதியில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட பெடரரை வீழ்த்தி ஜோன் மில்மேன் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

அதன்படி அவர் 3:6, 7:5, 7:6, 7:6 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். 

மேலும் காலிறுதியில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் மில்மேன்.