ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது ஏற்படக்கூடிய மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியத்தைத் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மேலும் பொத்துவில் பிரதேசத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக ஒகஸ்ட் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது.

இன்று  நண்பகல் 12.08 அளவில் இரத்மலானை, பரக்கடுவ, மடஹின்ன, பண்டாரவளை, ஹிங்குருகடுவ மற்றும் எதிமலே ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.