கொழும்பு - கடவத்தை பகுதியில் மஹிந்த அணியின் ஆதரவாளர்கள்  மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையால்  குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்காக கொடி கட்டிய பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள்  மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.