அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்க எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலமையிலான கூட்டு எதிரணியின் மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக மக்களை ஏற்றி வருவதற்கு தயாரான பஸ் ஒன்றின் மீது பதுளை பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலக்கத் தகடு அற்ற கனரக வாகனம் ஒன்றில் வந்த வர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன் இந்த பஸ்ஸில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.