கூட்டு எதிரணியினர் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகம் அறிவித்துள்ளது.

அத்துடன் மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாம் போராட்டத்தை நடத்துங்கள் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுக்கு இடையூறாக செயற்பட்டால் நாம் கோரிக்கை விடுக்காவிட்டாலும் பொலிஸார் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.