அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மேயாத மான் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படம் ஆடை. இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிகை அமலா பால் நடிக்கிறார். 

இப்படத்தின் “டோக் லைனில் அரகண்ட், அடாசியஸ், ஆர்ட்டிஸ்டிக்” என்று எழுதி அவர் ஏற்றிருக்கும் கதாப்பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். 

இதற்கு கர்வம், திமிர், வீம்பு பிடித்த பெண்ணாகவும், பயமற்ற, துணிச்சல் உள்ள, சாகசமுள்ள பெண்ணாகவும், கலையாற்றலும் கலையார்வமும் கொண்ட பெண்ணாகவும் பொருள் கொள்ளலாம் என்கிறார்கள் படக்குழுவினர். 

பிரதீப் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை வீ ஸ்டூடியோஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.

அமலா பாலின் இந்த தோற்றம் அவரது ரசிகர்களையும் தாண்டி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.