இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காணப்படும் மேஜர்ஹட் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள மேஜர்ஹட் மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேம்பாலத்துக்கு கீழே பயணித்துக் கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது பாலம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..

இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.