(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் போராட்டத்தை நடத்துங்கள். நாம் எந்தவொரு தடையும் செய்ய மாட்டோம். எனினும் பாராளுமன்ற வளாகத்தில் எம்.பிக்களுக்கு இடையூறாக செயற்பட்டால் பொலிஸார் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழ் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் பிரதமர் இதனை தெரிவித்தார்.

மேலும் கூட்டு எதிரணியின் போராட்டத்தை தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்கவில்லை. நல்லாட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டமையின் காரணமாகவே கூட்டு எதிரணியினர் போராட்டத்தை நடந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.