நாளை புதன்கிகழமை நடத்தப்படவுள்ள கூட்டு எதிணியின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27 இன் 2 கீழான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

அத்துடன் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையையும் மனித உரிமையையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். 

எனினும் ஆர்ப்பாட்டத்துக்கு மக்களை கொண்டு வருவதற்கான அரச மற்றும் தனியார் பஸ் சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான பஸ் அனுமதி பத்திரம் வழங்குவதனை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. 

மேலும் கொழும்பு நகருக்கு மக்கள் நுழைவதனை தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்குமாறு அரசாங்கம் நீதிமன்றத்தை கோரியுள்ளது என்றும் தெரிவித்த அவர்,  மக்களின் போராட்டங்களை தடுக்கும் நோக்கம் உள்ளதா? என இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.