மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னச்சோலை பகுதியில் தாயொருவரும் அவரது மகனும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் இவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ஷன் ஜோதிமலர் என்ற பெண்ணும், தர்ஷன் நிக்ஸன் என்ற (வயது 4) மகனுமே காணாமல்போயுள்ளதாகவும், காணாமல்போன பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், இவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் 065 2224423 என்ற மட்டு. பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.