முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கப்பாட்டிற்கு வரும் மனோநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நான் சிறிசேனவின் மனதை படித்துள்ளேன்,அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கப்பாட்டிற்கு வரும் மனோநிலையில் உள்ளார் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எனது கணிப்பு சில வேளைகளில் பிழையாகயிருக்கலாம் ஆனால் அரசியலை பொறுத்தவரை சில முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் சில தீர்மானங்களிற்கு வரவேண்டும், என தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார  மகிந்த ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டால் ஜனாதிபதி தேர்தலிற்கான அவசியமிராது என்றும் தெரிவித்துள்ளார்.

இருவரும் இணைந்தால் மஹிந்த பிரதமராவார், அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவார்,இதன் மூலம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதனை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலே இல்லாமல் போகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.