வடமாகாணத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்து யாழ்.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 

வடமாகாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் நிலையில் இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் மந்த கதியிலேயே இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்தும் வன்முறைகளுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் துரித கதியில் கைதுசெய்யப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.