வத்தளை, மாபொல பகுதியில் வியாபாரி ஒருவரிடம் கொள்ளையிட முற்பட்ட ஒருவரை கைதுசெய்துள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவரிடம் கொள்ளையிட முற்பட்டபோது பிரதேச மக்கள் நடத்திய தாக்குதல் காரணமாக  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இவ்வாறு தப்பிச் சென்ற மூன்று சந்தேக நபர்களுள் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் காயமடைந்துள்ளமையினால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.