பிரான்ஸில் ஆரம்ப மற்றும் நடுநிலை இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப, நடுநிலை பாடசாலைகளின் இடைவேளை நேரம் உட்பட நாள் முழுவதும் மாணவ- மாணவிகள் கையடக்க தொலைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பாடசாலைகளுக்கு செல்லும் போது மாணவர்கள் தங்களது கையடக்க  தொலை அனைத்து வைப்பதுடன் அவற்றை பாதுகாப்பு அறையில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தை உயர் நிலைப் பாடசாலைகளுக்கு தாமாக முன்வந்து செயற்படுத்தலாம். தடையை மீறி கையடக்க  தொலைபேசியை பயன்படுத்தினால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.