தமிழ் மக்­களை பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளாக பார்க்கும் செயற்­பாடு தொடர்ந்து வரு­கின்­றது. இத்­த­கைய நட­வ­டிக்கை மன­வே­தனை தரு­கி­றது. எங்கள் மத்­தியில் இரா­ணுவம் இருந்து வீடு­க­ளையும், காணி­க­ளையும் வாழ்­வா­தா­ரத்­தையும் பிடுங்­கு­வது தொந்­த­ர­வாக உள்­ளது.  

samantha power

அவர்கள் முன்­பிலும் பார்க்க தற்­போது தங்­க­ளு­டைய முகாம்­களில் அடை­பட்டு இருப்­பது உண்­மை­யாக இருந்­தாலும் தங்­க­ளு­டைய தகவல் சேக­ரிக்கும் கட­மை­களில் இப்­போதும் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். பயங்­க­ர­வா­திகள் என்ற மனோ­நி­லை­யிலே தமிழ்­மக்கள் அனை­வ­ருமே அவர்கள் பார்க்­கின்­றனர். தமி­ழர்கள் பயங்­க­ர­வா­திகள் என்ற எண்­ணத்தில் இவர்கள் செயல்­பு­ரிந்து வரு­வது மன­திற்கு வேதனை தரு­கி­றது என்ற கருத்தை நாம் அவ­ரிடம் முன்­வைத்தோம்.


இதை­விட வேறு பல பிரச்­சி­னைகள் தேவைகள் தொடர்­பிலும் எடுத்துக் கூறினோம் இவற்­றை­யெல்லாம் குறிப்­பெ­டுத்துக் கொண்­டார்கள். மேலும் பாது­காப்­புக்கு தற்­போது கூட வர­வு­செ­ல­வுத்­திட்டம் மூலம் பாரிய தொகை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றை யெல்லாம் எங்­க­ளுக்கு நன்மை பயர்க்­கக்­கூ­டிய விதத்தில் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என எடுத்துக் கூறியதுடன் ஏனைய மாகாணங்களிலும் பாரக்க நாங்கள் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதால் எங்களுக்கு கூடிய நிதி தேவை என்பதை எடுத்துக்கூறினோம். இவ்வாறு பல விடயங்களையும் எடுத்து கூறியுள்ளோம்.


இத்தகைய பிரச்சினையை அவர் ஏற்றுக்கொண்டார். உங்களுடைய பிரச்சினையை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். நாங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்திற்கும் எல்லாவிதமான நன்மைகளையும் செய்வோம் என்று அவர் உத்தரவாதம் தந்தார் என்று முதலமைச்சர் கூறினார்.