ரோஜர் பெடரர், ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published By: Vishnu

04 Sep, 2018 | 12:12 PM
image

அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் தொடரின் காலி­று­திக்கு முந்­தைய சுற்­றுக்கு சுவிட்­ஸர்­லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ரஷ்­யாவின் மரியா ஷர­போவா உள்­ளிட்டோர் முன்­னே­றியுள்ளனர்.

அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் தொடர் நடை­பெற்­று ­வ­ரு­கின்­றது. 

இதன் ஆண்கள் ஒற்­றையர் பிரிவு மூன்­றா­வது சுற்றில் நட்­சத்­திர வீர­ரான சுவிட்­ஸர்­லாந்தின் ரோஜர் பெடரர், தர­வ­ரி­சையில் 30 ஆவது இடத்­தி­லுள்ள ஆஸ்­தி­ரே­லி­யாவின் நிக் கிய­ரி­யாசை சந்­தித்தார். முதல் செட்டை 6–4 என கைப்­பற்­றிய பெடரர், அடுத்த இரண்டு செட்களையும் 6–1, 7–5 என வசப்­ப­டுத்­தினார். ஒரு மணி நேரம் 44 நிமிடம் நடந்த போட்­டியின் முடிவில், பெடரர் 6–4, 6–1, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்­றா­வது சுற்றில் ரஷ்­யாவின் ஷர­போவா, லத்­வி­யாவின் ஆஸ்­ட­பென்கோ மோதினர். 

இந்தப் போட்­டியில் அபா­ர­மாக ஆடிய மரியா ஷர­போவா 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றினார்.

அதே­வேளை மற்­றொரு போட்­டியில் தர­வ­ரி­சையில் இரண்­டா­மி­டத்தில்  உள்ள வீராங்­க­னை­யான ஜேர்­ம­னியின் கெர்பர் 6–3, 3–6, 3–6 என்ற கணக்கில் சுலோ­வா­கி­யாவின் சிபுல்­கோ­வா­விடம் (35ஆவது இடம்) தோல்­வி­ய­டைந்தார். 

இத­னை­ய­டுத்து, இந்த ஆண்டு முதல் 3 கிராண்ட்ஸ்லாம் தொட ரில் (டென்­மார்க்கின் வோஸ்­னி­ யாக்கி, ருமே­னி­யாவின் ஹாலெப்,

கெர்பர்) பட்டம் வென்ற மூன்று வீராங்கனைகளும் இத்தொடரிலி ருந்து வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35