வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட  இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில்  கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து  கைது செய்யப்பட்ட நியோமல் ரன்கஜீவ மற்றும் எமில் ரன்ஜன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்விருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.