பாகிஸ்தானின் 13ஆவது ஜனாதிபதிக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய வாக்குப்பதிவுகள் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி மம்னூன் ஹூசைனின் பதவிக்காலம் எதிர்வரும் 8ஆம் திகதி முடிவடையவுள்ளது.

மம்னூன் ஹூசைன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் தெஹ்ரீக் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவுத்ரி அட்சாஸ், ஜமைத், உலேமே கட்சி சார்பில் மவுலானா பசல் உர் ரெகுமான் ஆகியோர் களமறிங்கியுள்ளனர்.

கருத்துக் கணிப்பின் படி தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஆரிஃப் அல்வி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் பாகிஸ்தானில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கான  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.