பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹுசைன் இன்று பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள  பாகிஸ்தான் ஜனாதிபதியுடன், அரசாங்க மற்றும் தனியார்  துறைகளைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் 12பேர் வருகை தந்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- kapila