வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழங்குளம் மற்றும் கொந்தகாரக்குளம் ஆகிய பகுதியிலுள்ள மீட்கப்பட்ட மிதிவெடிகளை செயலிழக்கச் செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட நான்கு மோட்டார் குண்டுகளையும் இரண்டு மிதி வெடிகளையும் செயலிழக்க செய்வதற்கு உத்தரவு வழங்குமாறு கோரி ஓமந்தை பொலிஸார் வவுனியா நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

 

இதன்படியே இந்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்கான அனுமதியினை வவுனியா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இன்றைய தினம் இந்த குண்டுகளை செயலிழக்க செய்யவுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.