(நா.தனுஜா)

பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சகல திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவினை வழங்கத் தயாராக உள்ளதாக சீனாவின் ஷங்ஹய் மாநகர சபையின் மக்கள் காங்கிரஸ் தலைவர் யின் யிகுய் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவை இன்று கொழும்பு மாநகர சபையில் சந்தித்து கலந்துரையாடும போதே அவர் இதனை தெரிவித்தார்.

இச் சந்திப்பின் போது ஷங்ஹய் மாநகர பயனாளர்களின் உதவியினைப் பெற்றுக்கொணடு கொழும்பு நகரில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு உலகின் பல்வேறு நாடுகளிலும் பாரிய சவாலாக மாறியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தம்முடைய மாநகரசபை வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவித்த யின் யிகுய், குப்பை அகற்றல் தொடர்பில் தாம் நடைமுறைப்படுத்தி வரும் தொழில்நுட்பத்தை கொழும்பு மாநகரசபையுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.