(நா.தனுஜா)

எமது நாட்டை முன்னேற்றுவதற்கு பூகோள மற்றும் பொருளாதார அடிப்படையிலான சிறப்பியல்பினை கண்டறிய வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் மேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவத்தார்.

எமது நாடு இன்னமும் நடுத்தர வருமானம் பெறும் நாடு எனும் பட்டியலிலேயே உள்ளது. 2045 ஆம் ஆண்டளவிலேயே உயர்வருமானம் பெறும் நாடாக எமது நாடு மாற்றமடையும். நடுத்தர வருமானம் பெறும் நாடாக நாம் சிக்கியிருக்கும் சவாலை வென்றெடுப்பதற்கு எமது பௌதீக, உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக எமது நாடு அமைந்துள்ளமையினால் 2021 ஆம் ஆண்டளவில் இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் இலங்கை பாரிய முக்கியத்துவத்தினைப் பெறும் என்றார்.