(நா.தனுஜா)

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவினால் தகவல் கோரும் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. 

சித்திரவதைக்கு உட்படுத்தல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நீதிப்பொறிமுறையின் விரிவாக்கம் மற்றும் முன்னாள் குற்றவியல் விசாரணைப் பிரிவு தொடர்பான தகவல்கள் என்பன குறித்து தகவல் கோரியிருந்த ஐ.நா.வின் அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியமையாலேயே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குழுமத்தின் அவதானிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் தகவல்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.