வவுனியாவில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்துள்ளதாக வவுனியா வன இலாகாவினர்  தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

வவுனியா வன இலாகாவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வேலங்குளம் பகுதியில் இருந்து மகாரம்பைக்குளம் பகுதிக்கு 5 பேர் சட்டவிரோத மரக்கடத்திலில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

இதையடுத்து சட்டவிரோதமாக கடத்தவிருந்த 18 முதிரைமர குற்றிகளை ஏற்றிய நிலையில் பட்டா வாகனம் , இரண்டு மோட்டார்‌ சைக்கிள்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதுடன் 5 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த மரங்களை மகாரம்பைக்குளம் பகுதிக்கு எடுத்துச் செல்லவிருந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று  நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது ஐவரையும் எதிர்வரும் 06 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.