கொல்ஃப் போட்டிகளை மலையகம், கரையோர பிரதேசங்களில் நடத்துவதற்கு நடவடிக்கை 

Published By: Digital Desk 4

03 Sep, 2018 | 04:52 PM
image

2019 ஆம் ஆண்டில் சர்வதேச கொல்ஃப் போட்டிகளைப்போன்று இரண்டு கொல்ஃப் சுற்றுப்போட்டிகளை மலையகம் மற்றும் கரையோர பிரதேசங்களில் நடத்துவதற்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்  நடவடிக்கை எடுத்துவருகின்றது.

அத்துடன் ஒருங்கிணைந்த கொல்ஃப் வடிவமைப்பையும் நிர்மாணத்தையும் சாத்தியமான முறையில் முன்னெடுப்பதற்கும் பணியகம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் கொல்ஃப் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்  தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்றை அண்மையில் முன்னெடுத்தது.

மலைநாட்டிலும் கொழும்பிலும் 18 குழிகளைக்கொண்ட 3 கொல்ஃப் வளாகங்கள் காணப்படுகின்றன. 

மாலைநாட்டில் இரண்டு கொல்ஃப் வளாகங்கள் காணப்படும் நிலையில் கொழும்பில் பழைமை வாய்ந்த கொல்ஃப் வளாகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினை காணகூடியதாகவுள்ளது. 

இதன் மூலம் கொல்ஃப் ஆட்டக்காரர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புகளை இலங்கை வழங்குகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டே இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்  ஊடகவியலாளர்களுக்கான கொல்ஃப் சுற்றுத் தொடரை நடத்த தீர்மானித்துள்ளது. 

இதன் மூலம் சர்வதேச பிரசுரங்களின் பிரதிநிதிகள் கொல்ஃப் தொடர்பான மாற்றுக் கருத்தற்ற சிறந்த அனுபவத்தை பெறுவர்.

பலவிதமான மாறுபட்ட, இட அமைப்பைக் கொண்டுள்ளதும் தனித்தன்மையான நிலப்பகுதியை தன்னகத்தே கொண்டுள்ள நாட்டில் கொல்ஃப் பிரியர்கள் துறைஞர்களாகவோ அல்லது வினைஞர்களாகவோ இருப்பினும் அவர்களால் உண்மையிலேயே மகிழ்ச்சிகரமாக பொழுதை போக்க முடியும். 

நான்கு கொல்ஃப் வளாகங்களின் ஒவ்வொன்றினதும் தோற்றம் மிகச் சிறந்த வகையில் அமைந்துள்ள அதேவேளை, சில வசீகரத்தன்மையை கொண்டுள்ளதுடன் மேலும் சில உற்சாகமானதும் அத்துடன் சவாலானதாகவும் அமையலாம் என பணியகத்தின் நிர்வாக இயக்குனர் சுதேஷ் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

கொல்ஃப் சுற்றுலாவை ஊக்குவிக்கும் செயற்பாடானது தேசிய சுற்றுலா மூலோபாயத்துடன் சிறப்பாக செயல்படுகிறது. இதன் மூலம் இலங்கையை உயர் மட்ட மதிப்புள்ள இலக்காக நிலைநிறுத்த முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரஎலிய ஆகிய நகரங்களில் உள்ள கொல்ஃப் வளாகங்களின் திறன் குறித்து விழிப்புணர்வை மேற்கொள்ளும் நோக்கில் ஜேர்மனி மற்றும் சுவிஸ்சலாந்து ஆகிய நாடுகளில் இருந்து மிகச் சிறந்த ஊடகவியலாளர்கள் இங்கு வரவழைக்கப்பட்டனர்.

கொல்ஃப் விளையாட்டு ஜம்பவான்கள் சுற்றுலா மற்றும் கொல்ஃப் விளையாட்டு இரண்டிலும் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை பணியகம் ஆழமாக ஆய்வு செய்து வருகிறது. இலங்கைக்கு வருகை தந்துள்ள பயணிகள் இங்குள்ள கொல்ஃப் வளாகங்களின் பல்வேறு தன்மை, இடவியல்பு விளக்க விபரம் போன்றவற்றினால் மிகவும் கவரப்பட்டுள்ளனர். 

கண்டியில் உள்ள கொல்ஃப் வளாகம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வனப்புடைய நிலத்தில் அழகிய மேடு பள்ளம் கொண்ட பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த வளாகம் ஆசியாவிலே மிகச்சிறந்த வளாகங்களில் ஒன்று என “ஏஷியன் கொல்ஃப்” என்ற மாதாந்த சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. 

அத்துடன், உலகத்திலேயே மிக அழகிய 100 கொல்ஃப் வளாகங்களில் கண்டி வளாகம் ஒன்று என “கொல்ஃப்பேர்ஸ் டைஜஸ்ட்” (Golfers Digdst) என்ற சஞ்சிகை தரப்படுத்தியுள்ளது. ஹம்பாந்தோட்டையில் உள்ள கொல்ஃப் வளாகம் இலங்கையில் தனித்தன்மையை கொண்ட ஒரே வளாகமாக திகழ்கின்றது. 

இந்த வளாகம் ஏராளமான தென்னை மரங்களின் மத்தியில் சிறந்த வகையில் அமையப் பெற்றுள்ளது. இது சாதாரண விளையாட்டு வீரர்கள் மற்றும் பண்பட்ட வீரர்களுக்கு ரம்மியமான அதேவேளை, மதிப்பிட முடியாத சவால் சூழ்நிலையையும் கொண்டதாக அமைந்துள்ளது.

கொல்ஃப் கழகங்களுடன் சுற்றுலாத் தரப்பினரும் இணைந்துக்கொள்வதன் மூலம்,அதிக நிகர மதிப்புள்ளவர்களாக அவர்களை கருத முடியும் என பணியகத்தின் நிர்வாக இயக்குனர் சுதேஷ் பாலசுப்பிரமணியம் குறிப்பட்டுள்ளனார். 

இது தவிர, அண்மைக்காலத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ள ஆழ்ந்த சிந்தனையின் ஊடாக சர்வதேச கொல்ஃப் போட்டிகளை இங்கு நடத்தலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியான பிரபல பிரசுரங்களின் தலைவர்கள் நுவரஎலிய, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய கொல்ஃப் திடல்களில் ஆர்வத்துடன் விளையாடியுள்ளனர். 

அவர்கள் கொழும்பில் அமைந்துள்ள ரோயல் கொழும்பு கொல்ஃப் கிளப்பிற்கும் விஜயம் செய்தனர். அத்துடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை கொழும்பில் ஜெற்விங், ஷங்கிரி லா மற்றும் நுவர எலியவில் உள்ள கிராண்ட் ஹொட்டேல் ஆகியன வழங்கியுள்ளனது.

கொல்ஃப் ஆட்டக்காரர்கள், கொல்ஃப் விளையாட்டு வசதிகளை கொண்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அப்படியான பல பிரதேசங்கள் இலங்கையில் உள்ளன. அத்துடன் இலங்கை பல்வேறு கலாச்சார விழுமியங்கள் மற்றும் விசேட ஆரோக்கிய உடல் நல சிகிச்சைகள் போன்றவை தனித்துவமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கோல்பென்னின் தலைமை ஆசிரியர் பேனாட் ஸ்ரெக்மேயர் (Bernd Stegmaier) தெரிவித்துள்ளார். 

அவரின் பிரசுரத்தை வருடாந்தம் 1.5 மில்லியன் வாசகர்கள் பார்வையிடுகின்றனர். கொல்ஃப் மற்றும் ஆயுர்வேதம் என்பனவற்றை இணைப்பதன் மூலம் கொல்ஃப் விளையாட்டாளர்களை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான ஆர்வத்தை தூண்ட கூடிய சிறந்த காரணியாக கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுண்டோவ் (Zundorf) என்ற நிறுவனத்தை பிரதிநிதிப்படுத்தும் ஹான்ஸ் ஜோர்க் (Hans Jorg) இன் பிரசுரத்தை மாதாந்தரம் 150,000 பேர் வாசிக்கின்ற அதேவேளை, கொன்னோஸ்யர் சேக்கில் மற்றும் கொல்ஃப் வருடாந்தர நூல் (Connoisseur Circle and Golf Yearbook) சர்வதேச ரீதியாக பிரசுரிக்கப்படும் சஞ்சிகை என்பனவற்றை பிரதிநிதிப்படுத்தும் எல்சா மாரிய ஹொனிக்கர் (Elsa Maria Honecker) ஆகியோரே ஏனைய இரு ஊடகவியலாளர்கள் ஆவர்.

குளோபல் கொல்ஃப் ருவரிசம் அமைப்பின் (IAGTO) தரவிற்கு அமைய இந்தியாவில் 100,000 இற்கும் மேற்பட்ட கொல்ஃப் விளையாட்டு வீரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன். ஆசியாவில் 14 மில்லியன் கொல்ஃப் விளையாட்டு வீரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 2017-2020 திட்டத்திற்கு அமைய இலங்கையின் இயற்கை வளம் மற்றும் கலாச்சார விழுமிய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும், அதன் சுற்றுலா மூலோபாய அசாதாரணமான அனுபவங்களை கொண்டிருப்பதன் மூலம், கொல்ஃப் சுற்றுலாவை உயர்மட்ட இலக்காக கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை சுற்றுலாத்துறை 3 வது அந்நிய செலாவணி வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு அமைய 2020 ஆம் ஆண்டில் விரிவான சாத்திய கூற்றிற்கு அமைய 7 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக இலக்கை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக மற்றும் கரையோர மாவட்டங்களில் கொல்ஃப் விளையாட்டினை மேலும் மேம்படுத்தும் பணிகள் 2019ஆம் ஆண்டில் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு நிர்மாணம் மற்றும் செயல்பாடு ஆகியவை சாத்தியமான முதலீட்டு திட்டங்களாக பட்டியல் இடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22