(எம்.மனோசித்ரா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தல‍ைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு இது வரையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த வருடம் ஜனவரியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறும் ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். 

இந் நிலையில் அரசாங்கத்திற்குள்ளேயே இவ்வாறான மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஜனவரியில் தேர்தல்கள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகும்.

எவ்வாறிருப்பினும் இனியும் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.