பொலன்னறுவை, பெரியாறு புதூர் பகுதியில் சதுப்பு நிலத்தில் புதையுண்டு உயிரிழந்த ஏழு யானைகளுள் 5 யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

புதூர் சதுப்பு நிலையத்தில் புதையுண்ட யானைகளை மீட்க்கும் நடவடிக்கையானது நேற்றைய தினம் பிரதேச வாசிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கான வசதிகள் இன்மையினால் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந் நிலையில் இன்று காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்த மீட்பு பணியினால் உயிரிழந்த 7 யானைகளில் 5 யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. 

பெரியாற்று பகுதியில் பாசிகள் படிந்துள்ளமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் உயிரிழந்த மற்றைய இரண்டு யானைகளின் உடல்களையும் மீட்க்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.