காவியா பெண்கள் அமைப்பு  மற்றும்  சிறைச்சாலை அதிகாரிகள் இணைத்து  சர்வதேச பெண்கள் தினத்தை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

கைதிகளாக தடுத்து  வைக்கப்பட்டுள்ள  பெண்கள் நலன்சார்ந்த விடயங்கள்  மற்றும் மருத்துவ  முகாமும் இடம்பெற்றது.

இதன் போது காவியா பெண்கள்    அமைப்பின்  பணிப்பாளர்  திருமதி அஜித்குமார்  கருத்துத் தெரிவிக்கையில்,

பெண் கைதிகள் தொடர்பாக சிறைச்சாலையில்  இடம்பெற்ற  முதலாவது  நிகழ்வாக இந்த நிகழ்வாக கருதுகின்றோம்.

இந்த சர்வதேச பெண்கள் தினமானது 1911 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐக்கிய  நாடு சபையால் அறிவிக்கப் பட்டுள்ளது. 

இதன் பிரகாரம்  பெண்களின் தேவைகள்  பெண்களுக்கு எதிரான  வன்முறைகள் போன்றவற்றுக்கு குரல் கொடுக்கும் ஒரு தினமாகவும் இது கருத்தப்படுகின்றது.

இந்த ஆண்டானது பெண்கள் பங்களிப்பு நிறைந்த ஆண்டாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் எல்லாவற்றிலும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.