ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

இதன்படி 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை ஐந்து ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது. 

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உரிமையாளர்களின் நலன் கருதியே மேற்கண்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.