உள்­நாட்டு உரு­ளைக்­கி­ழங்கை விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து நேர­டி­யாக கொள்­வ­னவு செய்ய ச.தொ.ச. நிறு­வனம் தீர்­மா­னித்­துள்­ளது.

தற்­போது இடைத்­த­ர­கர்கள் மூல­மா­கவே உள்­நாட்டு உரு­ளைக்­கி­ழங்கு கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றது. இதன் மூலம் விவ­சா­யி­க­ளுக்கு உயர்ந்த விலை கிடைப்­ப­தில்லை.

விவ­சாய அமைச்­சிற்கும் வர்த்­தக மற்றும் கைத்­தொழில் அமைச்­சிற்குமிடையில் இடம்பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன்­ப­டி,ஒரு கிலோ உரு­ளைக்­கி­ழங்கை 100 ரூபா­விற்கு ச.தொ.ச. கொள்­வ­னவு செய்யவுள்­ளது. தற்­போது உள்­நாட்டு உரு­ளைக்­கி­ழங்கை மாத்­தி­ரமே ச.தொ.ச. விற்­பனை செய்வதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.