சேதனப் பச­ளையைப் பயன்­ப­டுத்தி விவ­சா­யத்தில் ஈடு­படும் விவ­சா­யி­க­ளுக்கு பெரும்­போ­கத்திலிருந்து ஹெக்டெ­ய­ருக்கு 18 ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­படவுள்­ளது.

நெல் உற்­பத்­திக்­காக யூரியா உரம் 500 ரூபா­வுக்­கும் ஏனைய உர வகை­களை 1500 ரூபா­வுக்கும் அர­சாங்கம் உர­மா­னி­ய­மாக வழங்கும். எனி­னும் சேதனப் பச­ளையைப் பயன்­ப­டுத்தி செய்­கையில் ஈடு­படும் விவ­சா­யி­களை ஊக்­கு­விப்­ப­தற்­காக இது­வரை எந்த சலு­கையும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. 

எதிர்­வரும் பெரும்­போ­கத்திலிருந்து விவ­சா­யி­க­ளுக்கு சேதனப் பச­ளையைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக ஒரு ஹெக்டெ­ய­ருக்கு 18 ஆயிரம் ரூபா வழங்­கப்­படும் என்று அமைச்சர் தெரி­வித்தார்.

இதற்­கு­ரிய அமைச்­ச­ரவைப் பத்­திரம் தற்­போது வகுக்­கப்­ப­ட்­டுள்­ளது. சுமார் 5 ஆயிரம் பேர் வரை தற்­போது சேதனப் பச­ளையைப் பயன்­ப­டுத்தி விவ­சா­யத்தில் ஈடு­ப­டு­கின்­றனர். 

விவ­சாயத் திணைக்­க­ளத்தின் ஆராய்ச்­சி­யா­ளர்கள் மேற்­கொண்ட ஆய்­வின்­படி நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­களில் உள்ள மணலில் போதி­ய­ளவு பொஸ்­ப­ரஸ், பொற்றாசியம் காணப்­ப­டு­வ­தாக தெரியவந்துள்ளது. அதனால் கூடுதலாக இரசாயன பசளையை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.