ஜாஎல பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 ஆயிரம் தெர்மடோல் போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீடக்கப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் 6 மில்லியன் ரூபா என தெரிவித்த விசேட அதிரடிப் படையினர், அவற்றை தம் வசப்படுத்தியதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.